நோக்கங்கள்
இதயங்கள் பேசலாம் நம் இணையதளத்தில் இனி ...
அமிழ்தினும் இனிய உறவு பெருமக்களே.
வணக்கம். உண்மை, உழைப்பு, உயர்வு என்ற மூன்று தாரக மந்திரத்தை உயிர்மூச்சாய் சுவாசித்து, மிக விரைவாக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருவது நம் நட்டுக்கவுண்டர்கள் இனமாகும். நம் இனம் ஒரு சிறுபான்மையினமாக இருந்தாலும் தொழில் வளர்ச்சி, கல்வியில் வளர்ச்சி - இவற்றால் பெரும்பான்மையாக இருந்து வருகின்றது. நம் இனமக்களின் விழிப்புணர்வே இதற்கு காரணமாயுள்ளது. நம்மினத்திலே வீட்டிற்கு ஒருவராவது பட்டதாரியாக உள்ளனர். நமது நாட்டுக்கவுண்டர்கள் சமூகத்திலே சுமாராக 20 ஆயிரம் குடும்பங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. மக்கள் எண்ணிக்கையில் சுமாராக ஒரு லட்சம் அதற்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கலாம். நம் இன மக்களின் ஒட்டு மொத்த விவரங்களை அறிந்துகொள்ள சேலம் கொங்குவேளாளர் நாட்டுக்கவுண்டர்கள் நலச்சங்கம் மற்றும் Kaptivate Web Design Studio, இணைந்து www.nattugoundergal.org என்ற உலகளாவிய வெப்-சைட் நிருவி வருகின்றனர். ஏற்கனவே சேலம் நாட்டுக்கவுண்டர்கள் நலச்சங்கம் (www.salemnattugounders.org) என்ற வெப்-சைட் - உருவாக்கி சமீபகாலம் வரையுள்ள செய்திகளை அளித்து வருகின்றனர். நமது ஒட்டு மொத்த www.nattugoundergal.org வெப்-சைட், என்ற இமாலய பணியினை சிறப்புடன் நிறைவேற்றிட நம் இனமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். புதிய வெப்சைட்டில் (www.nattugoundergal.org) அனைத்து குடும்பங்களின் புகைப்படம், குலப்பிரிவு, குடும்ப உறுப்பினர்களின் கல்வித்தகுதி, தொழில், திருமணநிலை, அனைத்து குலக்கோவில்களின் வரலாறு, அனைத்துலக நாட்டுக்கவுண்டர்கள் இன மக்களின் குடும்ப விவரங்கள் அனைத்தையும் அறிந்துக்கொள்ள இயலும்.
மேலும் தொழில்துறையில் சமீபகால தொழில் நுட்பங்கள், பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள்,கல்விப்பிரிவில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் அறிந்துகொள்ள நவீன செய்திகளை அளிக்க உள்ளோம். நம் சமுதாயப் பணியில் மிக்க ஈடுபாடு கொண்ட ஊருக்கு ஒரு நபர் எங்களுடன் இணைந்து பணியாற்றிட வாருங்கள். உங்கள் இல்லம் தேடி புகைப்படம், குடும்பவிவரங்கள் பெற நாங்கள் வருகிறோம். இது சாத்தியமாகுமா? என்ற ஐயப்பாடு வேண்டாம்.
ஏழுகோடி மக்களில் அரசுமேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர் - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி உலகத்தையே கைக்குள் அரசாங்கம் கொண்டுவரும் போது மிகச்சிறிய மக்கள் தொகையில் உள்ள நம் இன மக்களை வலைப்பின்னலுக்குள் (இணையதலதிற்குள்) கொண்டுவரமுடியும். இந்த தலைமுறைகளுக்கு தேவையான தகவல் பெட்டகத்தை நாங்கள் தருகிறோம். இதயம் திறந்து எங்களோடு இணைந்து செயல்பட அனைத்து உறவு பெருமக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். உறவு பெருமக்களே, நீங்கள் அளிப்பது மிகமிக குறைந்த பதிவு கட்டணமும்,தகவல் மட்டுமே. இது ஒரு சேவை மனப்பான்மையில் அளிக்க முன் வந்துள்ளோம். இந்த தலைமுறை தேவையினை நிறைவேற்றிட எங்களுடன் ஒத்துழைப்புதர வேண்டுகிறோம்.
இங்ஙனம்
என்றென்றும் சமுதயப்பணியில்
தலைவர்
கொங்குவேளாளர் நாட்டுக்கவுண்டர்கள் நலச்சங்கம் , சேலம் - 5 .
மற்றும் Kaptivate Web Design Studio
தொடர்புக்கு
மேலாளர் கொங்கு இல்லம்
சேலம் கொங்குவேளாளர் நாட்டுக்கவுண்டர்கள் நலச்சங்கம் , சேலம் - 5 .
தொலைபேசி : 0427 - 2332211 நேரம் : மாலை 9.00 மணிமுதல் 6.00 மணிவரை
9942186699
Kaptivate Web Design Studio

(கொங்)கு.கதிர்வேல்
தொலைப்பேசி எண்: +91 94438 23631